பாலியல் வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன்: மீது விதித்த தடையை நீக்க முடிவு

தினகரன்  தினகரன்
பாலியல் வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன்: மீது விதித்த தடையை நீக்க முடிவு

காத்மாண்டு: பாலியல் வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மீது விதித்த தடையை நீக்க அந்நாட்டு கிரிக்கெட் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. நேபாள நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் சந்தீப் லமிச்சானே. சுழற்பந்து வீச்சாளராக சிறப்புடன் விளையாடிய சந்தீப் மீது கவுசாலா பெருநகர காவல் துறையிடம் 17 வயது டீன்ஏஜ் சிறுமி ஒருவர் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார் .அதில், நான் சந்தீப்பின் தீவிர ரசிகை, அவருடன் வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் வழியே தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். என்னை சந்திக்க வேண்டும் என முதன்முதலில் அவரே என்னிடம் ஆவலுடன் கூறினார் என அந்த சிறுமி குற்றச்சாட்டாக கூறியுள்ளார். காத்மாண்டு ஓட்டல் ஒன்றில் தம்மை சந்தீப் ரூமுக்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். தன்னை 2 முறை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார் என்றும் அந்த புகாரில் தெரிவித்து இருக்கிறார்.கடந்த ஆகஸ்டு 21ம் தேதி பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. புகார் அளித்த 2 நாட்களுக்கு பின் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதே நாளில் அவரை நேபாள கிரிக்கெட் கூட்டமைப்பு சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. அவர் கருப்பு பட்டியலிலும் வைக்கப்பட்டார்.இதன்பின், 2022ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி காலை காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய சந்தீப், உடனடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும்பெற்றுள்ளார்.இந்நிலையில், நேபாள கிரிக்கெட் கூட்டமைப்பின் கூட்டம் பொக்காரா நகரில் நேற்று இரவு நடந்தது, இதில் சந்தீப் லமிச்சானே மீது பிறப்பிக்கப்பட்ட சஸ்பெண்டு உத்தரவை நீக்குவது என முடிவானது. அதுபற்றி இன்று முடிவு அறிவிக்கப்படும் என கூட்டமைப்பு அதிகாரி பிரேந்திரா பகதூர் சந்தா கூறியுள்ளார். இந்த சூழலில், சந்தீப்பை ஜாமீனில் விடுவது என்ற பதான் ஐகோர்ட்டு முடிவுக்கு எதிராக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவானது. அரசு வழக்கறிஞர் சார்பில் தாக்கலான மனுவில், பாலியல் வன்கொடுமை குற்றவாளியான கிரிக்கெட் வீர் சந்தீப் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை