பாகிஸ்தானில் தலிபான் தாக்குதல் மசூதி குண்டுவெடிப்பில் பலி 100 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
பாகிஸ்தானில் தலிபான் தாக்குதல் மசூதி குண்டுவெடிப்பில் பலி 100 ஆக உயர்வு

பெஷாவர்: பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் தலிபான் தற்கொலை படை நடத்திய குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 221 பேர் சிசிக்சை பெற்று வருகின்றனர். பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று முன்தினம் வழக்கமான மதியத் தொழுகை நடந்து கொண்டிருந்த போது, திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.  தொழுகையின் போது, முன்வரிசையில் இருந்த தெஹ்ரிக் ஏ தலிபான் அமைப்பின் தற்கொலை படையை சேர்ந்த தீவிரவாதி உடலில் கட்டி இருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார். இந்த தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது. 221 பேர் காயம் அடைந்துள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தாக்குதல் நடத்திய தலிபான் தீவிரவாதியின் தலை கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூலக்கதை