விமான கழிவறையில் புகைபிடித்த பயணி கைது

தினகரன்  தினகரன்
விமான கழிவறையில் புகைபிடித்த பயணி கைது

கொச்சி: விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது கழிவறையில் புகைபிடித்த விமான பயணி கைது செய்யப்பட்டார். கொச்சி நோக்கி நடுவானில் பறந்து சென்று கொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் கழிவறையில் பயணி ஒருவர் புகைப்பதை அறிந்த விமான ஊழியர், கொச்சி விமான நிலையத்தை வந்து சேர்ந்ததும் அவரை போலீசில் ஒப்படைத்தார். புகைபிடித்த திருச்சூரை சேர்ந்த பயணி சுகுமாறன் கைது செய்யப்பட்டார். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது சமீப காலமாக விமானப் பயணிகள் ஒழுங்கீனமாக, அத்துமீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

மூலக்கதை