10வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்: நடால் சாதனை சமன், மீண்டும் நம்பர் 1 ஆனார்

தினகரன்  தினகரன்
10வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்: நடால் சாதனை சமன், மீண்டும் நம்பர் 1 ஆனார்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதுடன், அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்ற ஸ்பெயினின் ரபேல் நடால் சாதனையையும் சமன் செய்து அசத்தினார். பரபரப்பான இறுதிப் போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசுடன் (24 வயது, 3வது ரேங்க்) நேற்று மோதிய ஜோகோவிச் (35 வயது, 4வது ரேங்க்) 6-3, 7-6 (7-4), 7-6 (7-5) என்ற நேர் செட்களில் வென்று 10வது முறையாக ஆஸி. ஓபன் கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 2 மணி, 56 நிமிடத்துக்கு நீடித்தது. இந்த வெற்றியின் மூலமாக, அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் சாதனையை சமன் செய்து (22 பட்டங்கள்) முதலிடத்தை பகிர்ந்துகொண்டார். மேலும், ஏடிபி ஒற்றையர் தரவரிசையில் மீண்டும் நம்பர் 1 அந்தஸ்தை ஜோகோவிச் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முதல் பரிசாக ரூ.16.5 கோடி வழங்கப்பட்டது. 2வது இடம் பிடித்த சிட்சிபாஸ் ரூ.9.25 கோடி பெற்றார்.

மூலக்கதை