97 மின்வாரிய 'கேங்மேன்'கள் 3 மாதத்தில் உயிரிழப்பு?

தினமலர்  தினமலர்
97 மின்வாரிய கேங்மேன்கள் 3 மாதத்தில் உயிரிழப்பு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


தமிழக மின் வாரியத்தில், மூன்று மாதங்களில், 97 'கேங்மேன்'கள் உயிர் இழந்துள்ளதாக, பாரதிய மஸ்துார் சங்க மாநில பொதுச் செயலர் முரளி கிருஷ்ணன் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:


திருவாரூர் மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள ஆலம்பாடியை சேர்ந்தவர் சிவசங்கர், 28. இவர் ஈரோடு மாவட்டம், பெருந்துறை மின் வாரியத்தில் கேங்மேனாக வேலை செய்து வந்தார். கடந்த 21ல், பெருந்துறை மருத்துவமனை அருகே, மின் வழித்தடத்தை மாற்றி விடுவதற்காக, மின் கம்பத்தில் ஏறினார்.

அப்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதே மாதிரி தமிழகம் முழுதும் பல சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு சரியான புள்ளி விபரங்கள் இல்லை என்றாலும், கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து மார்ச் வரை, மூன்று மாதங்களில் மட்டும், 97 கேங்மேன்கள் இறந்துள்ளதாக தெரிகிறது.

- நமது நிருபர் -

தமிழக மின் வாரியத்தில், மூன்று மாதங்களில், 97 'கேங்மேன்'கள் உயிர் இழந்துள்ளதாக, பாரதிய மஸ்துார் சங்க மாநில பொதுச் செயலர் முரளி கிருஷ்ணன் கூறினார்.அவர் அளித்த

நிலத்தில் முதலீடு செய்யும் ஆசை மக்களுக்கு அதிகரித்து வந்தாலும், எங்கு எப்படி எவ்வளவு கொடுத்து வாங்குவது போன்ற குழப்பங்கள் நீடித்து வருகிறது.

மூலக்கதை