பி.பி.சி., சர்ச்சை ஆவணப்படம் கேரளாவில் திரையிட முடிவு

தினமலர்  தினமலர்
பி.பி.சி., சர்ச்சை ஆவணப்படம் கேரளாவில் திரையிட முடிவு

திருவனந்தபுரம், பி.பி.சி., நிறுவனம் தயாரித்துள்ள சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை திரையிடப் போவதாக, கேரளாவில் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன. இதற்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த பி.பி.சி., நிறுவனம், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளது.

இதில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடியை, தொடர்பு படுத்தியுள்ளனர்.

இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த ஆவணப்படத்தை முடக்கும்படி, மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

நடவடிக்கை



இந்நிலையில், கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் இளைஞர் அமைப்பான, டி.ஒய்.எப்.ஐ., காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியினர் ஆகியோர், இந்த ஆவணப்படத்தை திரையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதற்கு, கேரள மாநில பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன், இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஆவணப்படத்தை திரையிடப் போவதாக அறிவித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, முதல்வர் பினராயி விஜயனுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள மத்திய பல்கலையில், மாணவர்களில் ஒரு தரப்பினர் இந்த ஆவணப்படத்தை நேற்று முன்தினம் ரகசியமாக திரையிட்டுள்னனர்.

'சகோதரத்துவ அமைப்பு' என்ற பெயரில் செயல்படும் மாணவர்கள், இந்த படத்தை திரையிட்டுள்ளனர்.

இது குறித்து, பா.ஜ., மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

'முறையான அனுமதியின்றி படத்தை திரையிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், பி.பி.சி., நிறுவனம் தயாரித்துள்ள சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை திரையிடப் போவதாக, கேரளாவில் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன. இதற்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு

நிலத்தில் முதலீடு செய்யும் ஆசை மக்களுக்கு அதிகரித்து வந்தாலும், எங்கு எப்படி எவ்வளவு கொடுத்து வாங்குவது போன்ற குழப்பங்கள் நீடித்து வருகிறது.

மூலக்கதை