பெரா வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு எதிரான ஆவணங்களை 3 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
பெரா வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு எதிரான ஆவணங்களை 3 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பெரா முறைகேட்டு வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு எதிரான விசாரணை ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் மூன்று வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி.டி.வி.தினகரன் இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக டிப்பர் இன்வேஸ்மெண்ட் மூலமாக டெபாசிட் செய்ததாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த 1996ம் ஆண்டு அமலாக்கதுறை டிடிவி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து கடந்த 1996ம் ஆண்டு அமலாக்கதுறை டிடிவி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த இரண்டு வழக்குகளும் சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு  உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, பெரா வழக்கில் டி.டி.வி தினகரனுக்கு எதிராக வழக்கு ஆவணங்களை மூன்று வாரத்தில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும் என அமலாக்கத்துறைக்கு நீபதிகள் உத்தரவிட்டு  விசாரணையை வரும் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

மூலக்கதை