வாலிபால் அணியை வாங்கிய விஜய் தேவரகொண்டா

தினகரன்  தினகரன்
வாலிபால் அணியை வாங்கிய விஜய் தேவரகொண்டா

ஐதராபாத்: வாலிபால் அணியை வாங்கியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், பெல்லி சூப்புலு, டாக்ஸிவாலா, டியர் காம்ரேட், லைகர், நோட்டா உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு இளம் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில் தற்போதைக்கு தனது பார்வையை விளையாட்டு பக்கம் அவர் திருப்பியுள்ளார். பிரைம் வாலிபால் லீக் என்ற அமைப்பு வாலிபால் ஆட்டங்களை மேற்கொள்ள உள்ளது. இதில் ஐதராபாத் அணியை அபிஷேக் ரெட்டி கன்கலா என்பவருடன் சேர்ந்து விஜய் தேவரகொண்டா வாங்கியிருக்கிறார். அபிஷேக் உரிமையாளராகவும் விஜய் தேவரகொண்டா இணை உரிமையாளராகவும் இருப்பார்கள். மேலும் இந்த அணியின் விளம்பர தூதராகவும் விஜய் தேவரகொண்டா இருக்கிறார். சமீபத்தில் ஐதராபாத் வாலிபால் அணியை சந்தித்து, அவர்களுடன் விஜய் தேவரகொண்டா புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். இந்த போட்டிகளில் கொல்கத்தா, அகமதாபாத், ஐதராபாத், கொச்சி, சென்னை, கோழிக்கோடு, பெங்களூரு, மும்பை என 8 அணிகள் மோதுகின்றன.

மூலக்கதை