அம்மா சிமென்ட் விநியோகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் ஆணை..!!

தினகரன்  தினகரன்
அம்மா சிமென்ட் விநியோகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: அம்மா சிமென்ட் விநியோகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் குந்தடத்தில் முறைகேடுகள் நடந்ததாக பாரதிய ஜனதா நிர்வாகி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பயனாளிகள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து சிமென்ட் மூட்டைகள் விநியோகம் என மனுதாரர் புகார் தெரிவித்திருந்தார். குந்தடம் வட்டார வளர்ச்சி அதிகாரி உட்பட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என தமிழக அரசு வாதிட்டது.

மூலக்கதை