பாகிஸ்தானில் படிப்படியாக சீரடையும் மின் வினியோகம்

தினமலர்  தினமலர்
பாகிஸ்தானில் படிப்படியாக சீரடையும் மின் வினியோகம்



இஸ்லாமாபாத் ஒருநாள் முழுதும் மின்தடையால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானில் மின் வினியோகம் படிப்படியாக சீரடைந்து வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், கராச்சி, லாகூர், குவெட்டா உட்பட பல முக்கிய நகரங்களில் மின்தடை நீடிக்கிறது.

நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு கவலைக்கிடமாக உள்ளது. அங்கு மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி உள்ளிட்டவை வெளிநாடுகளில் இருந்தே வாங்கப்படுகிறது.

அன்னியச் செலாவணி இல்லாததால் நிலக்கரி இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் பாகிஸ்தான் முழுதும் மின்தடை ஏற்பட்டது.

தேசிய மின்பகிர்மான தொகுப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது, கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்ட இரண்டாவது பெரும் மின்தடையாகும். ஏற்கனவே மின் உற்பத்தி கடுமையாக சரிந்துள்ளது.

இதனால், மின் சேமிப்புக்கான முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. மிகப் பெரும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவை, இரவு ௮:௩௦ மணிக்கு மேல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்களிலும் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாடு முழுதும் மின்தடை ஏற்பட்டது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவசர நடவடிக்கைகளில் மின்துறை ஈடுபட்டது. படிப்படியாக மின் வினியோகம் துவங்கிள்ளது.

நிலைமை சீரடைந்துள்ளதாக அந்த நாட்டின் மின் துறை அமைச்சர் குர்ரம் தஸ்தகிர் கூறியுள்ளார். இருப்பினும், கராச்சி, லாகூர் உட்பட பல முக்கிய நகரங்களில் மின்தடை தொடர்வதாக கூறப்படுகிறது.

இஸ்லாமாபாத் ஒருநாள் முழுதும் மின்தடையால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானில் மின் வினியோகம் படிப்படியாக சீரடைந்து வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.அதே நேரத்தில், கராச்சி, லாகூர்,

நிலத்தில் முதலீடு செய்யும் ஆசை மக்களுக்கு அதிகரித்து வந்தாலும், எங்கு எப்படி எவ்வளவு கொடுத்து வாங்குவது போன்ற குழப்பங்கள் நீடித்து வருகிறது.

மூலக்கதை