உலகை ஆள வேண்டுமா உம்ரான் | ஜனவரி 22, 2023

தினமலர்  தினமலர்
உலகை ஆள வேண்டுமா உம்ரான் | ஜனவரி 22, 2023

ராய்ப்பூர்: இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி சட்டீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்தது. இதில் ஷமி, சிராஜ் உள்ளிட்ட இந்திய ‘வேகங்கள்’ அசத்தினர். ஷமி மூன்று விக்கெட் வீழ்த்த நியூசிலாந்து அணி 34.3 ஓவரில் 108 ரன்களுக்கு சுருண்டது. எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து வென்றது. தொடரையும் 2–0 என கைப்பற்றியது. இரண்டு போட்டிகளிலும் பங்கேற்காத சக இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் உடன் ஷமி கலந்துரையாடினார். 

ஷமி கூறுகையில்,‘‘உம்ரான் நீங்கள் சிறப்பாக பந்துவீசுகிறீர்கள். இது அவ்வளவு எளிதானது இல்லை. ஆனால், சின்ன ‘அட்வைஸ்’ கூற விரும்புகிறேன். சரியான அளவில் பந்துவீசினால், நீங்கள் உலக கிரிக்கெட் அரங்கை ஆளலாம். சிறப்பான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது. இதே போன்ற திறமையான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும். தேசத்திற்காக போட்டிகளில் விளையாடும்போது, எவ்வித நெருக்கடியையும் மனதுக்குள் ஏற்றிக்கொள்ள கூடாது,’’ என்றார்.

மூலக்கதை