உலக கோப்பை ஹாக்கி 9-16 இடத்திற்கான போட்டி: ஜப்பானுடன் 26ம் தேதி இந்தியா மோதல்

தினகரன்  தினகரன்
உலக கோப்பை ஹாக்கி 916 இடத்திற்கான போட்டி: ஜப்பானுடன் 26ம் தேதி இந்தியா மோதல்

புவனேஸ்வர்: 16 அணிகள் பங்கேற்றுள்ள 15வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.லீக் சுற்று முடிவில் டி பிரிவில் 2வது இடத்தை பிடித்த இந்தியா, சி பிரிவில் 3வது இடத்தை பெற்ற நியூசிலாந்துடன் நேற்றிரவு ஓவர் கிராஸ் சுற்றில் மோதியது. இதில் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள இந்தியா, 12வது இடத்தில் உள்ள நியூசிலாந்திடம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதிலும் சமநிலை (3-3) தொடர்ந்ததால், சடன்டெத் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்தியா 2 முறை வாய்ப்பை தவறவிட்ட நிலையில், நியூசிலாந்து 5-4 என்ற கணக்கில் வெற்றிபெற்று கால்இறுதிக்குள் நுழைந்தது. சொந்த மண்ணில் இந்தியா கால் இறுதிக்குகூட தகுதி பெறமுடியாத பரிதாப நிலைக்கு சென்றுள்ளது. 1975ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்தியா பின்னர் கடந்த 48 ஆண்டுகளில் அரையிறுதிக்கு கூட சென்றதில்லை.இதனிடையே அடுத்ததாக 9 முதல் 16வது இடத்திற்கான போட்டியில் வரும் 26ம்தேதி மதியம் 2 மணிக்கு ஜப்பானுடன் மோத உள்ளது. நேற்று தோல்விக்கு பின் பேட்டி அளித்த இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பெனால்டிக் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் சிரமப்படுவதாக கூறினார்.

மூலக்கதை