வனப் பயிற்சியாளர் பணியிடங்களுக்கான குரூப் - 4 முதல் தாள் தேர்வு டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும்: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
வனப் பயிற்சியாளர் பணியிடங்களுக்கான குரூப்  4 முதல் தாள் தேர்வு டிசம்பர் 4ம் தேதி நடைபெறும்: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

சென்னை: வனப் பயிற்சியாளர் பணியிடங்களுக்கான குரூப் -4 முதல் தாள் தேர்வு டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. 10 வனப்பயிற்சியாளர் பணியிடங்களுக்கான குரூப் 4-தேர்வுக்கு 14,037 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  2,3-ம் தாள் தேர்வுகள் டிசம்பர் 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை காலை மத்திய வேலைகளிலும் டிசம்பர் 11-ம் தேதி காலையும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை