கால்பந்து வீரரான பிரபல நடிகர் மரணம்: அமெரிக்காவில் சோகம்

தினகரன்  தினகரன்
கால்பந்து வீரரான பிரபல நடிகர் மரணம்: அமெரிக்காவில் சோகம்

புளோரிடா: அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் வசித்து வந்த பிராட் வில்லியம் ஹென்கே (56), தேசிய கால்பந்து வீரராக இருந்து ஹாலிவுட் நடிகராக பிரபலமடைந்தார். ‘ஆரஞ்சு இஸ் தி நியூ பிளாக்’ என்ற திரைப்படத்தின் புகழ்பெற்ற இவர், நேற்று முன்தினம் திடீர் உடல்நலக் குறைவால் இறந்தார். அவரது உதவியாளர் ஷெரீ கோஹென் வெளியிட்ட அறிக்கையில், ‘மிகவும் திறமையான நடிகரான பிராட் மரணம் அடைந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்போம்’ என்று தெரிவித்துள்ளார். நெப்ராஸ்காவில் பிறந்த பிராட் வில்லியம் ஹென்கே, டென்வர் ப்ரோன்கோஸிற்காக கால்பந்து போட்டிகளில் விளையாடினார். அவரது உடலில் ஏற்பட்ட காயங்களால் 1994ல் கால்பந்து போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்தார். அதன்பின் கால்பந்து விளையாட்டை விட்டுவிட்டு, ஒரு நடிகராக பிரபலமானர். ‘லாஸ்ட்’, ‘டெக்ஸ்டர்’, ‘ஈஆர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை