சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுண்ணாம்பு கல் சுரங்கத்தில் மண் சரிவு: 7 தொழிலாளர்கள் பலி

தினகரன்  தினகரன்
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுண்ணாம்பு கல் சுரங்கத்தில் மண் சரிவு: 7 தொழிலாளர்கள் பலி

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பஸ்டர் மாவட்டத்தில் உள்ள சுரங்கத்தில் மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் தொழிலாளர்கள் கற்களை வெட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது மண் சரிந்து விபத்து ஏற்பட்டது.சத்தீஸ்கரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் மல்கான் கிராமத்தில் உள்ள சுண்ணாம்பு கல் சுரங்கத்தில் கிராம மக்கள் வேலை செய்துவருகின்றனர். சற்று நேரத்துக்கு முன்னதாக அந்த சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த மண்ச்சரிவில் முதற்கட்டமாக 12 பேர் சிக்கிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 5 பேரை மீட்க்கும் முயற்சியில் காவல்துறை, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் எஞ்சியவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மீட்புக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பலர் இந்த மண் சரிவில் சிக்கியிருக்க வாய்ப்பிருப்பதாக கிராமமக்கள் கூறுகின்றனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த மீட்பு பணியானது நடைபெற்றுவருகிறது.

மூலக்கதை