இந்தியாவுக்கு எதிரான தொடர்: வங்கதேச கேப்டன் விலகல்

தினகரன்  தினகரன்
இந்தியாவுக்கு எதிரான தொடர்: வங்கதேச கேப்டன் விலகல்

டாக்கா: வங்கதேசம் சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி நாளை மறுநாள் மிர்புரில் நடக்கிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து வங்கதேச அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் தமிம் இக்பால் விலகியுள்ளார். பயிற்சியின்போது தமீம் இக்பால் காயம் அடைந்ததால் தொடரிலிருந்து விலகியுள்ளார் என வங்கதேச அணி தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்த தஸ்கின் அகமதுவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் சேர்க்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை