ஐபிஎல் மினி ஏலம்: அடிப்படை விலை ரூ2 கோடியில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறாத சோகம்

தினகரன்  தினகரன்
ஐபிஎல் மினி ஏலம்: அடிப்படை விலை ரூ2 கோடியில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறாத சோகம்

மும்பை: ஐபிஎல் மினி ஏலம் வரும்  டிசம்பர் மாதம் 23ம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு 991  வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். எனினும் அதிகபட்சமாக 87  வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 30 வெளிநாட்டு வீரர்கள்  இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. வழக்கம்போல் ஐபிஎல் மினி ஏலத்தில் அதிகபட்ச  விலையாக 2 கோடி ரூபாயும், அதன் பிறகு ஒன்றரை கோடி ரூபாயும், அடுத்த பிரிவாக  ஒரு கோடி ரூபாயும், அடுத்த பிரிவுகளாக 75 லட்சம் மற்றும் 50 லட்சம் என  அடிப்படை விலை பிரிக்கப்பட்டிருக்கிறது. 2 கோடி ரூபாய் பிரிவு: நாதன்  கவுல்டர்-நைல், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், கிறிஸ்லின், டாம் பான்டன்,  சாம்கரன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், ஜேமி ஓவர்டன், கிரேக்  ஓவர்டன், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஆடம் மில்னே, ஜிம்மி  நீஷாம், கேன் வில்லியம்சன், ரிலீ ரோசோவ், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஏஞ்சலோ  மேத்யூஸ், நிக்கோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர். ஒன்றரை கோடி ரூபாய் பிரிவு:சீன்  அபோட், ரிலே மெரிடித், ஜே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஷாகிப் அல் ஹசன்,  ஹாரி புரூக், வில் ஜாக்ஸ், டேவிட் மாலன், ஜேசன் ராய், ஷெர்ஃபேன்  ரூதர்ஃபோர்ட். ஒரு கோடி ரூபாய்: மயங்க் அகர்வால், கேதர் ஜாதவ், மணீஷ்  பாண்டே, முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஆண்ட்ரூ டை,  ஜோ ரூட், லூக் வுட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், மார்ட்டின் குப்தில், கைல் ஜாமிசன், டாம் ஹென்ரி, டேரில் மிட்செல், ஹென்ரிச் கிளாசென், தப்ரைஸ் ஷம்சி, குசல் பெரேரா, ரோஸ்டன் சேஸ், ரகீம்  கார்ன்வால், ஷாய் ஹோப், அக்கேல் ஹொசைன், டேவிட் வைஸ்.இந்திய வீரர்கள்  மும்பை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட உனட்கட் , இந்திய அணியின்  நட்சத்திர வீரர் ரகானே ஆகியோர் தங்களது விலையை 50 லட்சம் ரூபாயாக குறைத்து  இருக்கிறார்கள். இதேபோன்று வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தனது  அடிப்படை விலையை 75 லட்சம் ரூபாயாக நிர்ணயித்திருக்கிறார்.

மூலக்கதை