கப்பலின் பின்பகுதியில் அமர்ந்து சோறு, தண்ணி இல்லாமல் 11 நாட்களாக 3,200 கி.மீ பயணித்த 3 அகதிகள் சீரியஸ்

தினகரன்  தினகரன்
கப்பலின் பின்பகுதியில் அமர்ந்து சோறு, தண்ணி இல்லாமல் 11 நாட்களாக 3,200 கி.மீ பயணித்த 3 அகதிகள் சீரியஸ்

லாகோஸ்: கப்பலின் பின்பகுதியில் அமர்ந்து கொண்டு 3,200 கி.மீ பயணித்த மூன்று அகதிகள் கேனரி தீவை அடைந்தும், அவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர். ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு வறுமை உள்ளிட்ட காரணங்களால் இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்து நாடு கடத்தி வருகின்றனர். அதனால் அவர்கள் கேனரி தீவுகளுக்கு அகதிகளாக இடம்ெபயர்ந்து வருகின்றனர். அதற்காக அவர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நைஜீரியாவின் லாகோஸில் இருந்து கேனரி தீவுக்கு 3 பேர் வந்தடைந்தனர். அவர்கள் மூன்று பேரும், அலிதினி - 2 என்ற எண்ணெய் கப்பலின் பின்பகுதியில் அமர்ந்து கொண்டே பயணித்தனர். சுமார் 11 நாட்கள் (3,200 கி.மீ கடல் பயணம்) பசி, தாகம், இரவுநேர கடல் பயணம் என்று பல நெருக்கடிகளையும் சந்தித்து எப்படி உயிருடன் கேனரி தீவுக்கு வந்தார்கள் என்று பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இருந்தும் அவர்களது உடல்நிலை மோசமாக இருந்ததால், அவர்கள் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர்.  அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்பெயினின் உள்துறை அமைச்சக அறிக்கையின்படி, இந்த ஆண்டு கடல் வழியாக 11,600 பேர் அவர்களது நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். அவர்களில் ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க அகதிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை