அமைச்சரையே 'ஓவர்டேக்' செய்யும் அதிகாரிகள்!

தினமலர்  தினமலர்
அமைச்சரையே ஓவர்டேக் செய்யும் அதிகாரிகள்!

'அமைச்சரையே அதிகாரிகள், 'ஓவர்டேக்' பண்றா ஓய்...'' என்றபடியே, 'பில்டர்' காபியை ஒரு மடக்கு குடித்தார் குப்பண்ணா.

''எந்த துறை அதிகாரி பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் தலைவரா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி இருக்கார்... துணை தலைவரா, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி இருக்கணும் ஓய்...

''ஆனா, வீட்டு வசதித் துறை செயலர் ஹதேஷ் குமார் மக்வானா, அந்த இடத்துல வேற யாரையும் நியமிக்காம, தானே கூடுதல் பொறுப்பை ஏத்துண்டுட்டார்...

''ஆரம்பத்துல இருந்தே இவருக்கும், அமைச்சருக்கும் ஏழாம் பொருத்தம்... இதனால, சி.எம்.டி.ஏ., சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகள் எடுக்கறதுல, ஹதேஷ் குமாரும், மெம்பர் செகரட்டரியும் தனி ஆவர்த்தனம் வாசிக்கறா ஓய்...

''சமீபத்துல நடந்த கூட்டத்துல கூட, அமைச்சரின் கருத்துக்கு மாறான முடிவுகளையே இவா எடுத்திருக்கா... இது, பலரையும் முகம் சுளிக்க வச்சுடுத்து... 'முதல்வர் தலையிட்டு பஞ்சாயத்து செஞ்சா தான் நிலைமை சரியாகும்'னு மத்த அதிகாரிகள் நினைக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

'அமைச்சரையே அதிகாரிகள், 'ஓவர்டேக்' பண்றா ஓய்...'' என்றபடியே, 'பில்டர்' காபியை ஒரு மடக்கு குடித்தார் குப்பண்ணா.''எந்த துறை அதிகாரி பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''சென்னை

மூலக்கதை