சபரிமலையில் தரிசனத்துக்கு 8 மணி நேரம் காத்திருப்பு

தினகரன்  தினகரன்
சபரிமலையில் தரிசனத்துக்கு 8 மணி நேரம் காத்திருப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மட்டும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மண்டல காலத்தில் நடை திறந்த 12வது நாள் 12 விளக்கு என்று அழைக்கப்படுகிறது. இது சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பான நாளாக கருதப்படுகிறது.இதையொட்டி சபரிமலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று தரிசனத்திற்கு 89 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் காலை முதலே சபரிமலையில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 3 மணிக்கு நடை திறந்த போது பக்தர்களின் வரிசை மரக்கூட்டம் பகுதி வரை காணப்பட்டது. நேற்று அதிகாலை 2 மணியளவில் சபரிமலை வந்த பக்தர்களால் காலை 10 மணிக்குப் பின்னரே தரிசனம் செய்ய முடிந்தது. நேற்று 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். நெய்யபிஷேகம் செய்வதற்கும், பிரசாதம் வாங்குவதற்கும்  நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

மூலக்கதை