உலக கோப்பை கால்பந்து: யார் உள்ளே! யார் வெளியே? பதட்டத்தில் அணிகளும் ரசிகர்களும்...

தினகரன்  தினகரன்
 உலக கோப்பை கால்பந்து: யார் உள்ளே! யார் வெளியே? பதட்டத்தில் அணிகளும் ரசிகர்களும்...

உலக கோப்பை கால்பந்து தொடரில் 2வது சுற்று லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன. களத்தில் உள்ள 32 அணிகளில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்த நிலையில், ஓரிரு அணிகளின் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பல அணிகள் வாய்ப்பில் நீடிக்கின்றன. அதே சமயம் லீக் சுற்றுடன் வெளியேற உள்ள அணிகளின் பட்டியலும் நீள்கிறது. ஆசிய சாம்பியனும்,  போட்டியை நடத்தும் நாடுமான கத்தார்  லீக் சுற்றுடன்  வெளியேறிவிட்டது. எஞ்சிய ஒரு ஆட்டத்தில் வலுவான நெதர்லாந்து அணியை வீழ்த்தினாலும் பலன் இருக்காது. அதேபோல் தனது 2 லீக் ஆட்டத்திலும்  பெல்ஜியம், குரோஷியா என முன்னணி அணிகளுக்கு தண்ணி காட்டிய கனடாவால் தோல்வியை தவிர்க்க மட்டுமல்ல, டிரா கூட செய்ய முடியவில்லை. அதனால் அந்த அணியும் லீக் சுற்றுடன் வெளியேறுகிறது. சில அணிகள் தற்போதைக்கு 2வது இடத்தில் இருந்தாலும் 3வது மற்றும் கடைசி சுற்று லீக் ஆட்டத்தில் கிடைக்கும் வெற்றி, தோல்விகள் கடைசி இடத்தில் உள்ள அணிகளை கூட  நாக் அவுட் சுற்றுக்கு நகர்த்தி விடும். டிச.2ம் தேதியுடன் லீக் சுற்று முடிவகிறது. ஒருநாள் ஒய்வுக்கு பிறகு நாக் அவுட் சுற்று  டிச.4ம் தேதி தொடங்கி டிச.6ம் தேதி வரை நடக்கும். டிச.9, 10 தேதிகளில் காலிறுதி ஆட்டங்களும், டிச.14ம் தேதி அரையிறுதி ஆட்டங்களும்,  தொடர்ந்து டிச.17ம் தேதி 3வது இடத்துக்கான ஆட்டமும், டிச.18ம் தேதி பைனலும் நடைபெறும்.* பிரசல்ஸில் கலவரம்எப் பிரிவில் இடம் பெற்றுள்ள பெல்ஜியம் அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் மொராக்கோ அணியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. அந்த அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இன்னும் இருந்தாலும், மொராக்கோவிடம் அடைந்த தோல்வியால் அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். தலைநகர் பிரசல்ஸில் கலவரத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் கடைகளின் ஜன்னல்களை உடைத்தும், பட்டாசுகளை கொளுத்திப் போட்டும், வாகனங்களுக்கு தீ வைத்தும் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். தண்ணீரை பீய்ச்சி அடித்து கலவரத்தை கட்டுப்படுத்திய போலீசார், 11 ரசிகர்களை கைது செய்தனர்.* தென் கொரியாவை வீழ்த்தியது கானாஎச் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில், தென் கொரியாவுடன் மோதிய கானா அணி 3-2 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. உலக கோப்பையின் ஒரே போட்டியில் 2 கோல் போட்ட முதல் கானா வீரர் என்ற சாதனையை நிகழ்த்திய முகமது குதுஸ்.* செர்பியாவுடன் கேமரூன் டிராஉலக கோப்பை கால்பந்து ஜி பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் செர்பியா - கேமரூன் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கேமரூன் தரப்பில் ஜீன் சார்லஸ் கேஸ்டெலட்டோ 29வது நிமிடத்திலும், வின்சென்ட் அபுபக்கர் 63வது, எரிக் மேக்சிம் மோடிங் 66வது நிமிடத்திலும் கோல் போட்டனர். செர்பிய வீரர்கள் பாவ்லோவிச் (45’+1’), மிலிங்கோவிச் (45’+3’), அலெக்சாண்டர் மிட்ரோவிச் (53’) ஆகியோர் கோல் அடித்தனர். ஒரு கட்டத்தில் 3-1 என முன்னிலை வகித்த செர்பியா, பின்னர் அடுத்தடுத்து கோல் விட்டுக்கொடுத்து வெற்றி வாய்ப்பை வீணடித்தது.

மூலக்கதை