ஆந்திர முதல்வர் சகோதரி திடீர் கைது

தினகரன்  தினகரன்
ஆந்திர முதல்வர் சகோதரி திடீர் கைது

திருமலை: தெலங்கானாவில் பாதயாத்திரை மேற்கொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரி, ஆளும் டிஆர்எஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஷர்மிளாவை போலீசார் கைது செய்தனர். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் சகோதரியும் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளாவின் பிரஜா பிரஸ்தானம் (மக்கள் கேள்வி) என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இவரது பாதயாத்திரை நர்சம்பேட்டையில் 223வது நாளாக நேற்று மதியம் நடைபெற்றது. ஹனுமகொண்டா மாவட்டம்  சங்கரந்தண்டாவில் ஷர்மிளாவின் நடைப்பயணத்தை டிஆர்எஸ் கட்சியினர் தடுத்து நிறுத்தினர். அவர் பயன்படுத்தி வந்த பேருந்தை எரித்தனர். மேலும், ஷர்மிளா பாதயாத்திரைக்காக வந்த வாகனங்கள் மீது சிலர் கற்களை வீசினர். ஷர்மிளாவுக்காக வைக்கப்பட்ட பேனர்களை டிஆர்எஸ்  கட்சியினர் கிழித்து எறிந்தனர். பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் திடீரென போலீசார் ஷர்மிளாவை கைது செய்தனர்.

மூலக்கதை