இந்திய அணிக்கு 6வது பவுலர்தான் தேவை: ஆஷிஸ்நெக்ரா சொல்கிறார்

தினகரன்  தினகரன்
இந்திய அணிக்கு 6வது பவுலர்தான் தேவை: ஆஷிஸ்நெக்ரா சொல்கிறார்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், குஜராத் டைடன்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஆஷிஸ் நெக்ரா கூறியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே சாம்சனை உட்கார வைத்துவிட்டு தீபக் ஹூடாவிற்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். நியூசிலாந்து மண்ணில் ஹூடாவால் சிறப்பாக பந்துவீச முடிகிறது. இதனை நாம், டி20 தொடரிலேயே பார்த்தோம். சாம்சனை முதல் போட்டியில் சேர்த்துவிட்டு, இரண்டாவது போட்டியில் பெஞ்சில் உட்கார வைப்பதால், அவரது மன உறுதி குறையும். சாம்சனுக்கு ரெகுலராக வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கொடுக்கவே கூடாது. ஆகையால், மூன்றாவது போட்டியிலும் சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்காமல், தீபக் ஹூடாவுக்குத்தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அணிக்கு சாம்சனைவிட 6ஆவது பவுலர்தான் தற்போது தேவைப்படுகிறார். சாம்சனுக்கு வாய்ப்பு கொடுத்தால், 6ஆவது பவுலர் இருக்கமாட்டார். இதனால் அணிக்கு தோல்விதான் கிடைக்கும். இவ்வாறு கூறினார்.

மூலக்கதை