சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்பும் சீனர்கள்: பரவுது போராட்டம்

தினமலர்  தினமலர்
சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்பும் சீனர்கள்: பரவுது போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஷாங்காய்: கோவிட் கட்டுப்பாடுகளை நீக்கிட வேண்டும் என்றும் ஜனநாயகம் , சுதந்திரம் வேண்டும் என்றும் சீன மக்கள் முக்கிய நகரங்களில் போராட்டத்தில் 3 வது நாளாக தொடர்ந்து வருகின்றனர். அதிபர் மற்றும் கம்யூ., தலைவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். பல இடங்களில் போலீசார் போராட்டக்காரர்களை அகற்றினர்.

சீனாவில் நாள்தோறும் கோவிட் பாதிப்பு தொற்று 40 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதனால் சில பகுதிகளில் கோவிட் ஊரடங்கை அமல் செய்து வருகிறது சீனா. ஆனால் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

இதுவரை இல்லாத எதிர்ப்பு


இதனால் சீனாவின் முக்கிய நகரங்களான பெய்ஜீங், ஷாங்காய், ஜிங்ஜாங், நான்ஜிங் பகுதிகளில் மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். சில பகுதிகளில் பல்கைல., மாணவர்களும் ஆர்பாட்டத்தில் குதித்துள்ளனர். " இது போன்ற மக்கள் எழுச்சியான போராட்தை இதுவரை கண்டதில்லை " என சீன வாழ் முதியவர் ஒருவர் தெரிவித்தார்.

போராட்டத்தையொட்டி முக்கிய நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஷாங்காய்: கோவிட் கட்டுப்பாடுகளை நீக்கிட வேண்டும் என்றும் ஜனநாயகம் , சுதந்திரம் வேண்டும் என்றும் சீன மக்கள் முக்கிய நகரங்களில் போராட்டத்தில் 3 வது நாளாக தொடர்ந்து வருகின்றனர். அதிபர்

மூலக்கதை