சீனாவின் டியாங்காங் ஆய்வு நிலையத்திற்கு பயணம்: நாளை விண்ணில் பாய்கிறது ஷென்ஷோ-15 ராக்கெட்

தினகரன்  தினகரன்
சீனாவின் டியாங்காங் ஆய்வு நிலையத்திற்கு பயணம்: நாளை விண்ணில் பாய்கிறது ஷென்ஷோ15 ராக்கெட்

சீனா: விண்வெளியில் சீனா அமைத்து வரும் ஆய்வு நிலையத்திற்கு நாளை மேலும் மூன்று வீரர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். டியாங்காங் என்று பெயரிடப்பட்டுள்ள விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைத்து வரும் சீனா அதன் கட்டுமான பணிகளுக்காக பல்வேறு நிபுணர்களை விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. இதற்காகவே ஷென்ஷோ என்ற கனரக விண்கலத்தினை சீனா தயாரித்துள்ளது. இந்நிலையில் நாளை மூன்று விண்வெளி வீரர்களுடன் ஷென்ஷோ-15 விண்கலம் ஏவப்படுகிறது. ஜியோங்வான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படும் ராக்கெட்டில் மூன்று வீரர்கள் பயணிக்க இருக்கின்றனர். இவர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு டியாங்காங் விண்வெளி நிலையத்தில் கட்டுமான மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுவார்கள் என்று சீனா விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை