ரோட்டோரத்தில் குப்பையுடன் எரிக்கப்படும் எலக்ட்ரானிக் கழிவுகளை அகற்றுங்க

தினமலர்  தினமலர்
ரோட்டோரத்தில் குப்பையுடன் எரிக்கப்படும் எலக்ட்ரானிக் கழிவுகளை அகற்றுங்க



மாவட்டம் முழுவதும் எலக்ட்ரானிக்குகளின் பயன்பாடுகள் அதிகரித்த நிலையில் மக்கள் அவற்றை பயன்படுத்திவிட்டு தெருக்கள், குப்பை தொட்டிகளிலும் போடாமல் ரோட்டோரங்களில் தீயிட்டு கொளுத்துகின்றனர்.

அதிலிருந்து வெளிவரும் வாயுக்கள் விஷத்தை விட கொடுமையானது.

பல இடங்களில் தொடரும் இப்பிரச்னை யால் வயதானவர்கள்,குழந்தை கள் பலியாகும் அவலமும் நீடிக்கிறது.

இதன் வாயுக்கள் காற்றில் பரவி பல கிலோமீட்டர் துாரத்திலிருப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இதில் மனிதர்கள் பாதிப்பதோடு வாயில்லா மிருகங்களும் பாதிக்கப்படுகின்றன.

திடக்கழிவு மேலாண் மை திட்டம் பேரூராட்சி, ஊராட்சிகளில் மக்கும் பொருட்களை சேகரித்து உரமாக மாற்றும் பணிகளும் முறையாக நடக்கவில்லை.

பணியாளர்களும் பல இடங்களில் பிளாஸ்டிக், எலெக்ட்ரானிக் கழிவுகளை எரிப்பதால் மக்களுக்கு மூச்சித்திணறல் ஏற்படுத்துகின்றன.

மூச்சித்திணறல் மட்டுமின்றி அதிலிருந்து வெளிவரும் வாயுக்களால் புற்றுநோய், காசநோய், உடல்ஊனம் உள்ளிட்ட நோய்களும் உண்டாகிறது.மண் வளத்தையும் இது பாதிக்கிறது.மாவட்ட நிர்வாகம் இதன் மீது தனிக்கவனம் செலுத்தவேண்டும்.

மாவட்டம் முழுவதும் எலக்ட்ரானிக்குகளின் பயன்பாடுகள் அதிகரித்த நிலையில் மக்கள் அவற்றை பயன்படுத்திவிட்டு தெருக்கள், குப்பை தொட்டிகளிலும் போடாமல் ரோட்டோரங்களில் தீயிட்டு

மூலக்கதை