தனுஷ்கோடி வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்: கலங்கரை விளக்கம் செயல்படுவது எப்போது

தினமலர்  தினமலர்
தனுஷ்கோடி வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்: கலங்கரை விளக்கம் செயல்படுவது எப்போது

ராமேஸ்வரம்-ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் திறப்பு விழா கண்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் கலங்கரை விளக்கம் பயன்பாட்டிற்கு வராததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.

புயலில் 1964ல் சின்னாபின்னமாகிய தனுஷ்கோடியில் மத்திய அரசு ரூ.7 கோடியில் கலங்கரை விளக்கம் அமைக்கும் பணியை 2020ல் துவக்கியது. 150 அடி உயரத்தில் கடல் அழகு, மீன்பிடி படகுகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் டெலஸ்கோப்புடன் கலங்கரை விளக்கம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து மே 11ல் காணொளி காட்சி மூலம் மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்.

ஆனால் கலங்கரை விளக்கத்தின் மேல் தளத்தில் சுற்றுலாப் பயணிகள் செல்ல 'லிப்ட்' இயந்திரம் பொருத்தாமல் இருந்ததால், சுற்றுலா பயணிகளை பார்வையிட அனுமதிக்கவில்லை. இதையடுத்து பணி முடிந்து 6 மாதங்கள் ஆகியும் லிப்ட் பொருத்தாமல் பணி கிடப்பில் உள்ளதால் கலங்கரை விளக்கம் பூட்டி கிடக்கிறது.

இதனால் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து தனுஷ்கோடி வரும் சுற்றுலாப் பயணிகள் கலங்கரை விளக்கத்தில் ஏறி தனுஷ்கோடி கடல் அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

---

ராமேஸ்வரம்-ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் திறப்பு விழா கண்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் கலங்கரை விளக்கம் பயன்பாட்டிற்கு வராததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.புயலில்

மூலக்கதை