நான்கு ஆண்டுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி; புல்மேடு பாதையில் அதிகாரிகள் ஆய்வு

தினமலர்  தினமலர்
நான்கு ஆண்டுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி; புல்மேடு பாதையில் அதிகாரிகள் ஆய்வு


சபரிமலை : கேரளாவில் 2018 ல் ஏற்பட்ட பெருமழை சேதத்துக்கு பின் இந்தாண்டு முதல் புல்மேடு பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாரிகள் அப்பாதையில் நடந்து சென்று ஆய்வு நடத்தினர்.

இடுக்கி சப் கலெக்டர் அருண் எஸ். நாயர் தலைமையில் வருவாய், வனம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வண்டிபெரியாறில் இருந்து சத்திரம், உப்புதரை புல்மேடு வழியாக 16 கி.மீ., துாரம் நடந்து சன்னிதானம் வந்தனர். வழிகளில் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள், இனி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர். இப்பாதையில் உள்ள இயற்கை அருவியான உரக்குழி தீர்த்தத்தையும் அவர்கள் பார்வையிட்டனர்.

சபரிமலை : கேரளாவில் 2018 ல் ஏற்பட்ட பெருமழை சேதத்துக்கு பின் இந்தாண்டு முதல் புல்மேடு பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாரிகள் அப்பாதையில் நடந்து சென்று ஆய்வு

மூலக்கதை