பல்வேறு சேவைகளை பெற இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம்

தினமலர்  தினமலர்
பல்வேறு சேவைகளை பெற இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம்


புதுடில்லி : பள்ளி, கல்லுாரி சேர்க்கை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, மத்திய - மாநில அரசு பணி, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழை இனி கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற சட்ட திருத்த மசோதாவை, வரும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த 1969ல் இயற்றப்பட்ட பிறப்பு - இறப்பு பதிவு சட்டத்தின்படி, நாட்டில் நிகழும் அனைத்து பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயம். மீறுவது தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது.

இந்த பிறப்பு - இறப்பு பதிவுகளை மாநில அரசுகளும், மாநகராட்சிகளும் நிர்வகித்து வருகின்றன. இந்திய பதிவாளர் ஜெனரலின் கீழ் செயல்படும், சி.ஆர்.எஸ்., எனப்படும், மக்கள் பதிவு நடைமுறையின் வாயிலாகவும் இந்த தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன.

தமிழகம், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, திரிபுரா, உத்தரகண்ட், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள், சி.ஆர்.எஸ்., நடைமுறை வாயிலாக பிறப்பு - இறப்பு விபரங்களை ஏற்கனவே பதிவு செய்து வருகின்றன.

புதுடில்லி : பள்ளி, கல்லுாரி சேர்க்கை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, மத்திய - மாநில அரசு பணி, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழை இனி கட்டாயமாக

மூலக்கதை