பால் கூட்டுறவு சங்கங்கள் கலைப்பு? புத்தாண்டில் தேர்தல் நடத்த ஏற்பாடு!

தினமலர்  தினமலர்
பால் கூட்டுறவு சங்கங்கள் கலைப்பு? புத்தாண்டில் தேர்தல் நடத்த ஏற்பாடு!


சென்னை : பால் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை கலைத்து விட்டு, புத்தாண்டில் தேர்தல் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகம் முழுதும், 10 ஆயிரத்து, 540 தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள்; 25 மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவை அனைத்தும், தமிழக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தின் கீழ் இயங்கி வருகின்றன. இவற்றின் நிர்வாக குழுவுக்கான தேர்தல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

அதன்படி, 2018 பிப்ரவரியில் தேர்தல் நடத்தப்பட்டு, மே மாதம் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். ஆனால், மதுரை மாவட்ட பால் கூட்டுறவு சங்கம், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்திற்கு தேர்தல் நடத்தப்படவில்லை.

பால் கூட்டுறவு சங்க நிர்வாக குழுவில், அ.தி.மு.க.,வினர் தான் பெரும்பாலும் நிர்வாகிகளாக உள்ளனர். இவர்கள், பால் கொள்முதல் மற்றும் உற்பத்தியில் ஒத்துழைக்காததால், அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

சென்னை : பால் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை கலைத்து விட்டு, புத்தாண்டில் தேர்தல் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுதும், 10 ஆயிரத்து, 540 தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள்; 25

மூலக்கதை