மழையால் போட்டி ரத்து | நவம்பர் 27, 2022

தினமலர்  தினமலர்
மழையால் போட்டி ரத்து | நவம்பர் 27, 2022

ஹாமில்டன்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. ஹாமில்டனில் இரண்டாவது போட்டி நடந்தது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூருக்கு பதிலாக தீபக் ஹூடா, தீபக் சகார் தேர்வாகினர். ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

மழை குறுக்கீடு: இந்திய அணிக்கு கேப்டன் ஷிகர் தவான், சுப்மன் கில் ஜோடி துவக்கம் தந்தது. இந்திய அணி 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 22 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி நான்கு மணி நேரம் தடைபட்டது. மழை நின்ற பின், தலா 29 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. மாட் ஹென்ரி ‘வேகத்தில்’ தவான் (3) வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், சான்ட்னர், பிரேஸ்வெல், பெர்குசன் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார்.

 

மீண்டும் மழை: இந்திய அணி 12.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 89 ரன் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. சுப்மன் கில் (45), சூர்யகுமார் (34) அவுட்டாகாமல் இருந்தனர். மழை, ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து போட்டியை பாதியில் ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர்.

 

நியூசிலாந்து அணி 1–0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது, கடைசி போட்டி, நவ. 30ல் கிறைஸ்ட்சர்ச்சில் நடக்கவுள்ளது.

 

மூலக்கதை