வெற்றியை நோக்கி தமிழகம்: ‘கூச் பெஹார்’ டிராபியில் | நவம்பர் 27, 2022

தினமலர்  தினமலர்
வெற்றியை நோக்கி தமிழகம்: ‘கூச் பெஹார்’ டிராபியில் | நவம்பர் 27, 2022

தேனி: மிசோரம் அணிக்கு எதிரான ‘கூச் பெஹார்’ டிராபி லீக் போட்டியில் தமிழக அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ‘கூச் பெஹார்’ டிராபி (நான்கு நாள் போட்டி) நடக்கிறது. தேனியில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க (டி.என்.சி.ஏ.,) அகாடமி மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் தமிழகம், மிசோரம் அணிகள் விளையாடுகின்றன.

 

தமிழக அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 545 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. முகமது அலி (301), அதிஷ் (213) அவுட்டாகாமல் இருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை துவக்கிய மிசோரம் அணி 103 ரன்னுக்கு சுருண்டு ‘பாலோ–ஆன்’ பெற்றது. வன்ரோத்லிங்கா (50) மட்டும் அரைசதம் அடித்தார். தமிழகம் சார்பில் அச்யுத் 4, ஆகாஷ் தேவ்குமார் 3, விக்னேஷ் 2, கார்த்திக் மணிகண்டன் ஒரு விக்கெட் சாய்த்தனர்.

 

பின், 2வது இன்னிங்சை துவக்கிய மிசோரம் அணி, ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 86 ரன் எடுத்து, 356 ரன் பின்தங்கி இருந்தது. வன்ரோத்லிங்கா (30) ஆறுதல் தந்தார். தமிழகம் சார்பில் விக்னேஷ் 4, ஆகாஷ் தேவ்குமார் 2 விக்கெட் கைப்பற்றினர்.

மூலக்கதை