மோடி மைதானம்: ‘கின்னஸ்’ சாதனை | நவம்பர் 27, 2022

தினமலர்  தினமலர்
மோடி மைதானம்: ‘கின்னஸ்’ சாதனை | நவம்பர் 27, 2022

புதுடில்லி: ஐ.பி.எல்., பைனலை (2022) காண அதிகபட்ச ரசிகர்கள் வருகை தந்ததற்காக ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானம் ‘கின்னஸ்’ சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

ஐ.பி.எல்., 15வது சீசனுக்கான (2022, மே 29) பைனல் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடந்தது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி முதன்முறையாக கோப்பை வென்றது.

 

மோடி மைதானத்தில் 1,10,00 பேர் அமர்ந்து போட்டியை காணும் வசதி உள்ளது. இது, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை (1,00,024) விட அதிகம். ஐ.பி.எல்., பைனலை காண 1,01,566 பேர் வந்திருந்தனர். இதன்மூலம் அதிகபட்ச ரசிகர்கள் வருகை தந்ததற்காக மோடி மைதானம், உலக சாதனைக்கான ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம் பெற்றது. இதற்கான சான்றிதழ், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் ஜெய் ஷாவிடம் வழங்கப்பட்டது.

 

இதுகுறித்து ஜெய் ஷா கூறுகையில், ‘‘அதிக ரசிகர்கள் ஐ.பி.எல்., பைனலை காண வந்ததற்காக மோடி மைதானம் ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்ததில் மகிழ்ச்சி. இதற்காக ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என்றார்.

மூலக்கதை