அரசு பங்களாவை காலி செய்ய மெகபூபாவுக்கு 2வது நோட்டீஸ்

தினகரன்  தினகரன்
அரசு பங்களாவை காலி செய்ய மெகபூபாவுக்கு 2வது நோட்டீஸ்

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி அரசு பங்களாவை 24 மணி நேரத்துக்குள் காலி செய்ய அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக விரைவில் சட்டப்பேரவை தேர்தல்நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல்வர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியிருக்கும் வீடுகளை காலி செய்ய அம்மாநில நிர்வாகம் உத்தரவிட்டு வருகிறது. அனந்தனக் மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு மிகுந்த குப்கர் சாலையில் உள்ள அரசு பங்களாவில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வசித்து வருகிறார். இந்த பங்களாவை காலி செய்யுமாறு அவருக்கு கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், 2வது முறையாக நேற்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மெகபூபாவை தவிர 7 முன்னாள் எம்எல்ஏக்களும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘24 மணி நேரத்திற்குள் அரசு குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மூலக்கதை