கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசு? ஏவுகணை விஞ்ஞானிகளுடன் சந்திப்பு

தினகரன்  தினகரன்
கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசு? ஏவுகணை விஞ்ஞானிகளுடன் சந்திப்பு

சியோல்: வட கொரியாவில் ஏவுகணை விஞ்ஞானிகளுடனான சந்திப்பில் அதிபர் கிம் ஜாங் உன் தனது மகளையும் அழைத்து வந்து, அவரை தனது அரசியல் வாரிசாக்குகிறாரா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது மகள் கிம் ஜூ ஏ உடன் உள்ள புகைப்படங்களை கடந்த சில தினங்களுக்கு முன் முதல் முறையாக வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தினர். இதில் அவர் வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹ்வாசோங்-17 ஏவுகணை சோதனை நடத்திய போது பெற்றோருடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. வடகொரியாவின் எதிர்கால அரசியல் தலைவராக தனது மகளை கிம் தயார் செய்வதற்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்நிலையில், ஹ்வாசோங்-17 ஏவுகணை சோதனை வெற்றிக்கு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிபர் கிம் தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் நேற்று 2வது முறையாக வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிம் ஜாங் உன்னின் 10 வயது மகள் ஜூ ஏ மிகவும் நேசத்திற்குரிய மகள் என்று அந்நாட்டு அரசு ஊடகம் கூறியுள்ளது. கிம் ஜாங் உன்னுக்கு 3 குழந்தைகள் இருக்கலாம் என்றும் பொதுவெளியில் தெரியவந்திருப்பது அவரது 2வது மகள் என்றும் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலக்கதை