மோடியின் பிரசாரத்தில் ‘ட்ரோன்’ பறக்கவிட்ட 3 பேர் கைது: குஜராத் போலீஸ் நடவடிக்கை

தினகரன்  தினகரன்
மோடியின் பிரசாரத்தில் ‘ட்ரோன்’ பறக்கவிட்ட 3 பேர் கைது: குஜராத் போலீஸ் நடவடிக்கை

அகமதாபாத்: பிரதமர் மோடி பங்கேற்ற பிரசாரத்தில் ட்ரோனை பறக்கவிட்ட 3 பேரை குஜராத் போலீசார் கைது செய்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் பாவ்லா கிராமத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக அப்பகுதியில் கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஒன்று பறந்தது. இதையறிந்த பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார், அந்த ட்ரோனை செயலிழக்க வைத்து தரையிறக்கினர். தொடர்ந்து ட்ரோனை பறக்கவிட்டதாக கூறி 3 பேரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரத் படேல் கூறுகையில், ‘பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி வந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக பேரணி நடைபெறும் இடத்திற்கு அருகில் ஆளில்லா விமானங்களை பறக்கவிட மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருந்தார். இருந்தும், பிரதமர் மோடி வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் சிலர் ரிமோட் மூலம்இயக்கப்படும் ட்ரோன்களைப் பயன்படுத்தி கூட்டத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களை அடையாளங்கண்டு, தொடர்புடைய மூன்று பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து ட்ரோன் மற்றும் வீடியோ பதிவுகளையும் பறிமுதல் செய்தோம்’ என்றார்.

மூலக்கதை