வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே குதிரை பேரத்தில் இறங்கியது பாஜக; இமாச்சல் காங். தலைவர் ஆவேசம்

தினகரன்  தினகரன்
வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே குதிரை பேரத்தில் இறங்கியது பாஜக; இமாச்சல் காங். தலைவர் ஆவேசம்

சிம்லா: வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக குதிரை பேரத்தில் பாஜக இறங்கியுள்ளதாக இமாச்சல் பிரதேச காங்கிரஸ் மாநில தலைவர் கூறினார். இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனால் பாஜக தலைமை குதிரை பேரத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரஜ்னீஷ் கிம்தா கூறுகையில், ‘இமாச்சல் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கு முன்பாக ஆளும் பாஜக குதிரை பேரத்தில் இறங்கியுள்ளது. சில தலைவர்கள் மிரட்டப்பட்டு வருகின்றனர். நாட்டின் ஜனநாயகத்தை பாஜக பலவீனப்படுத்துகிறது. பல மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்த்துள்ளது. அக்கட்சி குதிரை பேரம் மூலம் தனது  அரசை அமைத்துள்ளது, ஆனால் இமாச்சல பிரதேசத்தில் அப்படி எதுவும்  நடக்காது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிக்கும் இடங்களில் பாஜக பிரச்னைகளை கிளப்பி வருகிறது. காங்கிரஸ் தொண்டர்கள் வலுவான எதிர்ப்பை காட்டி வருகின்றனர். எங்களுக்கு யார் மீது நம்பிக்கை இல்லை என்பதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பதும் கண்காணிப்பதும் காங்கிரசின் பொறுப்பாகும்’ என்றார்.

மூலக்கதை