ஓபிஎஸ், இபிஎஸ் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தினகரன்  தினகரன்
ஓபிஎஸ், இபிஎஸ் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினம்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் பொதுக்குழு மூலம் நிரந்தர தீர்வு எடுக்கப்பட்டுவிட்டது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி  இணைய வேண்டும் என பிரதமரோ, அமித்ஷாவோ பேசியது இல்லை, இனியும் அப்படி நடக்காது என்று ஜெயக்குமார் கூறினார்.

மூலக்கதை