ராகுல் காந்தி 79வது நாளாக ஒற்றுமை நடைபயணம்: 2வது நாளாக பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா பங்கேற்பு

தினகரன்  தினகரன்
ராகுல் காந்தி 79வது நாளாக ஒற்றுமை நடைபயணம்: 2வது நாளாக பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா பங்கேற்பு

போபால்: நாடு முழுவதும் ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்தியப்பிரதேச மாநிலத்தில் தனது 79வது நாள் பயணத்தை தொடர்ந்து வருகிறார். குமரி முதல் காஷ்மீர் வரையிலான தனது நடைப்பயணத்தை ராகுல் காந்தி செப்.7ம் தேதி தொடங்கினார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களை அடுத்து அவரது பயணம் நேற்று முன்தினம் மத்தியப்பிரதேச மாநிலத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று காலை எல்லை நகரமான போர்கான் பகுதியில் ராகுல் காந்தி 79வது நாள் பயணத்தை தொடங்கினார். நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மூவர்ண கொடிய ஏந்திய படி அவருடன் நடந்து செல்கின்றனர். வழிநெடுகளிலும் ஏராளமான பெண்கள், இளைஞர்கள், ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்றனர். மத்திய பிரதேசங்களின் 7 மாவட்டங்களில் சுமார் 380 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொள்ள ராகுல் திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரும் 2வது நாளாக ராகுல் காந்தியுடன் இணைந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை