திருப்பதியில் ₹25 கோடியில் அமைக்கப்பட்டது ஜனவரி முதல் சோலார் மின் உற்பத்தி தொடங்க வேண்டும்

தினகரன்  தினகரன்
திருப்பதியில் ₹25 கோடியில் அமைக்கப்பட்டது ஜனவரி முதல் சோலார் மின் உற்பத்தி தொடங்க வேண்டும்

*கமிஷனர் உத்தரவுதிருமலை : திருப்பதியில் ₹25 கோடியில் அமைக்கப்பட்ட உள்ள சோலார் மின் உற்பத்தி மையத்தை ஜனவரி முதல் மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று கமிஷனர் அனுபமா அஞ்சலி உத்தரவிட்டுள்ளார். திருப்பதி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரேணிகுண்டா மண்டலம் தூக்கிவாக்கத்தில் 26 ஏக்கரில் ₹25 கோடியில் சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநகராட்சிக்கு 6 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி கிடைக்க உள்ளது. இந்நிலையில், நேற்று சோலார் மின் உற்பத்தி மையத்தின் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் அனுபமா அஞ்சலி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: சோலார் மின் உற்பத்தில் திட்டத்தில் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க வேண்டும். ஜனவரி முதல் மின் உற்பத்தியை தொடங்க வேண்டும். மேலும், சோலார் மின் உற்பத்திக்காக அமைக்கப்பட்ட சோலார் தகடுகள்  சுற்றிலும் பாதுகாப்புச்சுவர் கட்டி முடிக்க வேண்டும். மழைநீர்  தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். ஆய்வின்போது, நகராட்சி பொறியாளர் சந்திரசேகர் மற்றும் பல அதிகாரிகள் உடனிருந்தனர்.

மூலக்கதை