'ட்ரோன்' வாயிலாக ஆயுத பெட்டி, பணக்கட்டுகள்: கைப்பற்றிய காஷ்மீர் போலீசார்

தினமலர்  தினமலர்
ட்ரோன் வாயிலாக ஆயுத பெட்டி, பணக்கட்டுகள்: கைப்பற்றிய காஷ்மீர் போலீசார்

ஜம்மு: பாகிஸ்தான் எல்லையில் இருந்து 'ட்ரோன்' எனப்படும் ஆள் இல்லா விமானம்வாயிலாக அனுப்பப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பணக்கட்டுகளை, ஜம்மு - காஷ்மீர் போலீசார் நேற்று கைப்பற்றினர்.

இது குறித்து சம்பா மாவட்ட சீனியர் எஸ்.பி.,அபிஷேக் மகாஜன் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கப்பால், பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்த ட்ரோன் வாயிலாக ஒரு மரப்பெட்டி நம் பகுதியில் வீசப்பட்டது. உள்ளூர் மக்கள் தந்த தகவலை வைத்து, இதிலிருந்து வெடிபொருட்கள், இரண்டு சீன பிஸ்டல்கள், தோட்டாக்கள், மற்றும் 5 லட்சம் ரூபாய் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இந்த வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்த திட்டமிட்டு இருக்கலாம். ஆனால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஜம்மு: பாகிஸ்தான் எல்லையில் இருந்து 'ட்ரோன்' எனப்படும் ஆள் இல்லா விமானம்வாயிலாக அனுப்பப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பணக்கட்டுகளை, ஜம்மு - காஷ்மீர் போலீசார் நேற்று கைப்பற்றினர்.இது

மூலக்கதை