கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற மனைவி போலீசில் சிக்கியது எப்படி?

தினமலர்  தினமலர்
கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற மனைவி போலீசில் சிக்கியது எப்படி?

மதுரை: மதுரையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் செந்தில்குமாரை 37, கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற விவகாரத்தில், போலீஸ் கவனத்தை திசை திருப்ப சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க கேட்டு மனைவி வைஷ்ணவி 25, நாடகமாடியது தெரியவந்துள்ளது.

மதுரை திருப்பாலை பி.வி.கே.ஆர்., நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். மஸ்கட் நாட்டில் பொறியாளராக பணிபுரிந்தார். இவரது மனைவி வைஷ்ணவி. திருமணத்திற்கு முன்பே மாமா மகன் சிவகங்கை வெங்கடேசனை காதலித்தார். பெற்றோர் எதிர்ப்பால் திருமணம் செய்ய முடியவில்லை. செந்தில்குமாரை திருமணம் செய்ததும் அவர் வெளிநாட்டிற்கு வேலை சென்றது வைஷ்ணவிக்கு வசதியாகிவிட்டது. அடிக்கடி வெங்கடேசனை சந்தித்தார்.

கடந்த செப்.,ல் ஊர் திரும்பிய செந்தில்குமார், இனி குடும்பத்துடன் இருக்கப்போவதாக தெரிவித்தார். தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பார் எனக்கருதி, அவரை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர்.

கடந்த அக்.,27 ல் டூவீலரில் வந்த செந்தில்குமாரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்தனர். இவ்வழக்கில் இருவரையும், கூலிப்படையைச் சேர்ந்த ஒருவரையும் தல்லாகுளம் உதவிகமிஷனர் ஜெகன்நாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் தன் கணவரை கொல்ல முயன்ற வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்ககோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வைஷ்ணவி மனு செய்தார். அந்த மனு விசாரணைக்கு வரும்முன்பே, அவர் கைது செய்யப்பட்டதால் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது.

இதுஒருபுறமிருக்க, செந்தில்குமாரோ 'சொத்து பிரச்னையில் என் அண்ணன் நவநீதகிருஷ்ணன் கொலை செய்ய முயற்சித்தார். அவரை கைது செய்யுங்கள்' என தொடர்ந்து எங்களிடம்கூறி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தார். வைஷ்ணவி மீது சந்தேகம் உள்ளது என நாங்கள் கூறியபோது அதை நம்ப மறுத்தார்.

இச்சூழலில் தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சி.பி.சி.ஐ.டி., விசாரணை கேட்டு வைஷ்ணவி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அம்மனு விசாரணைக்கு வருவதற்குள் அவரது அலைபேசியை ஆய்வு செய்ததில் வெங்கடேசனுடன் தொடர்பில் இருந்தது உறுதியானது. இதன் அடிப்படையில் இருவரையும் விசாரித்த போது ஒப்புக்கொண்டனர்.

செந்தில்குமாரிடம் 'உண்மையில் என்ன நடந்தது' என்று வைஷ்ணவியை வைத்தே அவரிடம் சொல்ல வைத்தோம். அவரிடம் 'ஸாரி மாமா. தெரியாம தப்பு பண்ணிட்டேன்' என வைஷ்ணவி மன்னிப்பு கேட்டார். அப்போதும் அவர் மீது கோபப்படாத செந்தில்குமார், 'இன்னும் நீ சின்ன பிள்ளைனு நிரூபிச்சிட்டே இருக்கே' எனக்கூறியவர், 'கவலைப்படாதே, உன்னை விரைவில் ஜாமினில் எடுக்கிறேன்' என ஆறுதல் கூறினார். இவ்வாறு போலீசார் கூறினர்.

மதுரை: மதுரையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் செந்தில்குமாரை 37, கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற விவகாரத்தில், போலீஸ் கவனத்தை திசை திருப்ப சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க கேட்டு

மூலக்கதை