அனைத்து துறைகளிலும் புகுந்து, வாரி குவிக்கும் மாஜிக்கள்!

தினமலர்  தினமலர்
அனைத்து துறைகளிலும் புகுந்து, வாரி குவிக்கும் மாஜிக்கள்!

''ஓய்வுல போனவங்க தலையீடு அதிகமா இருக்குதுங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.

''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''சென்னை மாநகராட்சியில வேலை பார்த்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் சிலர், அந்தந்த ஏரியா கவுன்சிலர்களின் உதவியாளர்கள் மாதிரி செயல்படுறாங்க... கட்டடம் கட்ட அனுமதி, வரி மதிப்பீடு, பிறப்பு, இறப்பு பதிவு, கடை நடத்த உரிமம், சுகாதார சான்றுன்னு, பல சேவைகளை மாநகராட்சி அலுவலகங்கள்ல வழங்குறாங்களே...

''மாஜி அதிகாரிகள், பணியில இருக்கிற அதிகாரிகளுக்கு அழுத்தம் குடுத்து, இந்த மாதிரி காரியங்களை சுலபமா முடிச்சுக்கிறாங்க... அது மட்டும் இல்லாம, ஒப்பந்த நிறுவனங்கள் மூலமா சாலை, தெருவிளக்கு, திடக்கழிவு மேலாண்மை போன்ற பணிகள் நடக்குதுங்க... இதுலயும், கவுன்சிலர்கள் சார்புல குறிப்பிட்ட தொகையை கமிஷனா கேட்டு அடம் பிடிக்கிறாங்க...

''சோழிங்கநல்லுார் மண்டல மின் துறையில ஓய்வு பெற்ற ஒரு அதிகாரியை, சில கவுன்சிலர்கள் உதவியாளர் மாதிரி வச்சுக்கிட்டு, மாநகராட்சியின் அனைத்து துறைகளிலும் புகுந்து, வாரி குவிக்கிறாங்க... இதனால, வெறுத்து போன நேர்மையான அதிகாரிகள், கமிஷனரிடம் புகார் குடுத்திருக்காங்க... இது சம்பந்தமா, விசாரணை நடக்குதுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''ஓய்வுல போனவங்க தலையீடு அதிகமா இருக்குதுங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''சென்னை மாநகராட்சியில வேலை பார்த்து

மூலக்கதை