பொருளாதார மந்த நிலை அடுத்த ஆண்டில் ஏற்படாது

தினமலர்  தினமலர்
பொருளாதார மந்த நிலை அடுத்த ஆண்டில் ஏற்படாது

புதுடில்லி :அடுத்த ஆண்டில், ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார மந்த நிலை ஏற்பட சாத்தியமில்லை என, 'மூடிஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலீட்டாளர் சேவையில் ஈடுபட்டுள்ள மூடிஸ் நிறுவனம், அதன் ஆய்வறிக்கை ஒன்றில், ஆசியா பசிபிக் பிராந்தியத்தில், அடுத்த ஆண்டில் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.அத்துடன், இப்பகுதியில் உள்ள நாடுகள், அதிக வட்டி உயர்வு மற்றும் மெதுவான உலக வர்த்தக வளர்ச்சி ஆகிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை, அடுத்த ஆண்டில் மெதுவான வளர்ச்சியை காணும் என்றும் தெரிவித்துள்ளது.மேலும், தொழில்நுட்பம் மற்றும் விவசாயத்தில் செய்யப்படும் முதலீடுகள் மற்றும் உற்பத்தி திறன் ஆதாயங்கள் ஆகியவை, இந்தியாவின் வளர்ச்சியை துரிதப்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளது.

அத்துடன், ரிசர்வ் வங்கி, பணவீக்கம் காரணமாக 'ரெப்போ' வட்டியை 6 சதவீதத்துக்கும் மேலாக அதிகரிக்க கூடும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.கடந்த ஆகஸ்டில், மூடிஸ் நிறுவனம், இந்தி யாவின் வளர்ச்சி நடப் பாண்டில் 8 சதவீதமாகவும்; அடுத்த ஆண்டில் 5 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுடில்லி :அடுத்த ஆண்டில், ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார மந்த நிலை ஏற்பட சாத்தியமில்லை என, 'மூடிஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.முதலீட்டாளர் சேவையில் ஈடுபட்டுள்ள மூடிஸ்

மூலக்கதை