டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்த சட்டம்: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் தகவல்

தினகரன்  தினகரன்
டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்த சட்டம்: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் தகவல்

ஜெய்ப்பூர்: ‘டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் வகையில் சட்டம் உருவாக்கப்படும்’ என்று ஒன்றிய அரசு  தெரிவித்துள்ளது. ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முதலில் செய்தி என்பது ஒரு வழி தொடர்பாக இருந்தது. ஆனால் எலக்ட்ரானிக் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் வளர்ச்சியால் செய்திகளின் தொடர்பு என்பது பன்முகத்தன்மையாகிவிட்டது. டிஜிட்டல் ஊடகங்கள் மூலமாக நாட்டில் எதோ ஒரு கிராமத்தில் நடக்கும் நிகழ்வு கூட தேசிய அளவில் பிரபலமடைகிறது. டிஜிட்டல் ஊடகங்கள் வாய்ப்புக்களையும் வழங்குகின்றன. அதே நேரத்தில் சவால்களையும் வழங்குகிறது. டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்த சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். உங்கள் வேலையை எளிமையாகவும், எளிதாகவும் ஆக்குவதற்காக சட்டத்தை நாங்கள் கொண்டு வருவோம். இதுதொடர்பான மசோதாவை அறிமுகப்படுத்துவதற்காக அரசு பணியாற்றி வருகிறது. செய்திதாள்களை பதிவு செய்யும் அம்சத்தையும் எளிமையாக்குவதற்கான நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1967ம் ஆண்டு பத்திரிக்கை மற்றும் நூல்கள் சட்டத்துக்கு பதிலாக விரைவில் ஒன்றிய அரசு புதிய சட்டத்தை கொண்டு வரும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை