ஒடிசாவில் 2 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
ஒடிசாவில் 2 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். ஒடிசா மாநிலம், கப்ராகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜல் மகாதேவ் கோயிலுக்கு அருகே உள்ள காட்டில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்ததை கண்டறிந்த ஒடிசாவின் உயரடுக்கு சிறப்பு நடவடிக்கைக் குழு மற்றும் போலங்கிர் மாவட்ட தன்னார்வப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, மாவோயிஸ்ட் முகாமில் இருந்து சில ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மூலக்கதை