ஆப்கனில் அமலுக்கு வந்தது மீண்டும் 'கசையடி' தண்டனை

தினமலர்  தினமலர்காபூல், ஆப்கனில், குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் 'கசையடி' தரும் தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், மீண்டும் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள தலிபான்கள், 1990களில் அவர்கள் ஆட்சியில் இருந்த போது கடைப்பிடித்த தண்டனை முறைகளை மீண்டும் அமல்படுத்தி உள்ளனர். இதன்படி, ஆப்கானிஸ்தானில் குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில், கசையடி தரும் தண்டனை முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதையடுத்து, சில குற்ற வழக்குகளில் சம்பந்தபட்ட மூன்று பெண்கள் உட்பட 12 பேருக்கு பொது இடத்தில் கசையடி தர தலிபான்கள் தீர்ப்பளித்தனர். குற்றவாளிகளுக்கு கசையடி தரும் நிகழ்ச்சியை காண வருமாறு, பழங்குடியின தலைவர்கள், உள்ளூர் மக்களுக்கு லோகார் மாகாண கவர்னர் அலுவலகம் அழைப்பு விடுத்தது. இதன்படி, 12 பேருக்கும் பொது இடத்தில் வைத்து 21 கசையடி முதல், 39 கசையடி வரை தரப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

காபூல், ஆப்கனில், குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் 'கசையடி' தரும் தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், மீண்டும் தலிபான்கள் ஆட்சி நடந்து

மூலக்கதை