இந்தியாவில் அமேசான் அகாடமி என்ற பெயரில் இயங்கி வரும் ஆன்லைன் கல்வி தளத்தை மூட உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
இந்தியாவில் அமேசான் அகாடமி என்ற பெயரில் இயங்கி வரும் ஆன்லைன் கல்வி தளத்தை மூட உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் அமேசான் அகாடமி என்ற பெயரில் இயங்கி வரும் ஆன்லைன் கல்வி தளத்தை மூட உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அமேசான் நிறுவனம் இந்தியாவில் மின்னணு வர்த்தகம் மட்டுமின்றி பல்வேறு தொழில்கள் மற்றும் சேவைகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக உயர்கல்வி மாணவர்களுக்கான அமேசான் அகாடமி ஆன்லைன் தளம் கொரோனா காலகட்டமானா கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. ஐஐடி நுழைவு தேர்வு, நீட் போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி வழங்கி வந்த அமேசான் அகாடமி திடீரென மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்டில் அமேசான் அகாடமி மூடப்படும் எனவும் ஆன்லைனில் உள்ள பயிற்சி ஆவணங்களை 2024 வரை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் மூடும் நடவடிக்கை இருக்கும் என அமேசான் கூறியுள்ளது. ஆன்லைன் கல்வி சேவையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களாக வந்த பைஜுஸ், வேதாந்து உள்ளிட்டவை செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துவரும் நிலையில் அமேசான் அகாடமி இந்தியாவை விட்டே வெளியேறுகிறது.

மூலக்கதை