நியூசி.,யை துாசியாக ஊதித்தள்ளிய இந்தியா: 306 ரன்கள் குவிப்பு

தினமலர்  தினமலர்
நியூசி.,யை துாசியாக ஊதித்தள்ளிய இந்தியா: 306 ரன்கள் குவிப்பு

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 306 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று ‛டி-20', மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. ‛டி-20' தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இந்த நிலையில் ஆக்லாந்தில் முதலாவது ஒருநாள் போட்டி நடக்கிறது. இதில் இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக வழிநடத்துகிறார். ‛டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பவுலிங் தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான், சுப்மன் கில் துவக்கம் தந்தனர். இருவரும் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினர். ஷிகர் தவான் அவ்வபோது பந்தை பவுண்டரி எல்லைக்கு அனுப்பினார். முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்தபோது அரைசதம் அடித்த கில் (50) அவுட்டானார். அடுத்த ஓவரில் தவான் 72 ரன்னில் (13 பவுண்டரி) வெளியேறினார். பின்னர் ஸ்ரேயாஷ் உடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பன்ட் (15), சூர்யகுமார் (4) ஏமாற்றினர்.

சஞ்சு சாம்சன் தன் பங்கிற்கு 36 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் 80 ரன்னில் கடைசி ஓவரில் கேட்சானார். கடைசி நேரத்தில் வாஷிங்டன் சுந்தரின் அதிரடியால் அணியின் ஸ்கோர் 300ஐ தொட்டது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. 16 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னுடனும், ஷர்துல் தாகூர் 1 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் சவுத்தீ, பெர்குசன் தலா 3 விக்., வீழ்த்தினர்.

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 306 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அரைசதம் அடித்து

மூலக்கதை