‛‛விடாது கருப்பு'': சீனாவை துரத்தி துரத்தி துவம்சம் செய்யும் கொரோனா: ஒரே நாளில் 32,943 பேர் பாதிப்பு

தினமலர்  தினமலர்
‛‛விடாது கருப்பு: சீனாவை துரத்தி துரத்தி துவம்சம் செய்யும் கொரோனா: ஒரே நாளில் 32,943 பேர் பாதிப்பு

வூஹான்: சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்று அதிகளவு பரவி வரும் நிலையில், நேற்று (நவ.,24) ஒரேநாளில் 32,943 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு உலகம் முழுவதும் பரவிய தொற்றுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல நாடுகளில் கோவிட் 3 அலைகளுக்கு மேல் ஏற்பட்டு, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட போதிலும், சீனா தொற்று பாதிப்பில் இருந்து விரைவாக மீண்டது.

தற்போது படிப்படியாக சில நாடுகளில் கோவிட் தொற்று குறைந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.

கடந்த மூன்று வாரங்களில் மட்டும், கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் கோவிட் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும், தின சராசரி தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், சீன அரசு தெரிவித்தது. நேற்று முன்தினம் (நவ.,23) ஒரே நாளில் 31,656 பேருக்கு கோவிட் தொற்று உறுதியான நிலையில், நேற்று மட்டும் 32,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கோவிட் தொற்று கண்டறியப்பட்டதில் இருந்து இதுவே ஒருநாள் அதிக பாதிப்பாகும்.

வூஹான்: சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்று அதிகளவு பரவி வரும் நிலையில், நேற்று (நவ.,24) ஒரேநாளில் 32,943 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான்

மூலக்கதை